lundi 2 janvier 2017

வெண்பா மேடை

வெண்பா மேடை - 34
    
வழிமோனை வெண்பா!
  
கன்னல் கவிக்குயிலே! கண்கவரும் காரிகையே!
கன்னம் கமழ்மலரோ? கற்கண்டோ? - கன்னியுன்
காதாடும் கன்மணியைக் காற்றாடும் கார்க்குழலைக்
காதல் கவியெழுதக் காட்டு!
  
வெண்பாவின் அனைத்துச் சீர்களிலும் மோனை ஒன்றி வருவது வழிமோனை வெண்பா எனப்படும்.
  
வழிமோனை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
   
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.01.2017

4 commentaires:

  1. அருமையான பதிவு

    RépondreSupprimer
  2. கல்லான காரிகைமேல் கால்பதித்து காகுத்தன்
    கல்லாற் கடற்கடந்த காதைசொல - கல்லும்
    கவிதொடுக்க காப்பாம் கலைத்தாய் கனிவாய்
    கவிகொடுத்தாள் கம்பன்தன் கைக்கு

    பாட்டரசே பைந்தமிழிற் பாசெயுமுன் பாதையிலே
    பாட்டெழுதிப் பார்ப்பேன் பயின்று

    RépondreSupprimer